தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. லிஸ்ட்டில் இடம் பிடிக்க தவறிய அஜித், சூர்யா

vijay-rajini-ajith
vijay-rajini-ajith

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர்கள் ஏராளம் ஆனால் ஒரு சிலர் நடிகர்களின் படங்கள் மட்டுமே பிரம்மாண்டமான வசூலை அள்ளி உள்ளியுள்ளன.. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக வசூலை அள்ளிய ஐந்து திரைப்படங்கள் எது என்பது குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. 1. 2.0 : ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று  600 டு 800 கோடி வரை வசூல் செய்து உள்ளது.

2. பொன்னியின் செல்வன் : பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக மணிரத்தினம் எடுத்திருந்தார். இந்த படமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் அந்த காலத்து படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எங்கும் நல்ல வசூலை அள்ளியது. ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் சுமார் 500 கோடி வசூல் செய்ததாம்.

3.  விக்ரம் : லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்து நகர்ந்தது.  மேலும் படத்தில் ஆக்சன் சென்டிமென்ட் அனைத்தும் அற்புதமாக இருந்ததால் அதிக நாட்கள் போட்டிகளோடு மட்டுமல்லாமல் வசூலில் 410 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது.

4. வாரிசு : விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஒரு திரைப்படமாக இருந்தால்  மக்கள் மத்தியில்  கலவையான விமர்சனத்தைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. ஒட்டு மொத்தமாக வாரிசு திரைப்படம் கடைசி வரை 310 கோடி வசூல் செய்தது.

5. பிகில் : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அதேசமயம் விஜய்யோட மாஸ் பஞ்ச் டயலாக் போன்றவை சிறப்பாக இருந்ததால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று 300 கோடி வசூலில் செய்தது. இந்த 5 திரைப்படங்கள் தான் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களாக இருந்து வருகின்றன.