இந்தியாவில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளி வருகின்றன அதில் டாப் ஹீரோக்களின் படங்கள் புதிய ரெக்கார்டு படைப்பது உண்டு அப்படி முதல் நாளில் உலக அளவில் அதிக வசூல் செய்த 5 திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்..
RRR : பாகுபலி, பாகுபலி 2 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி ராம்சரண், ஜூனியர் என்டிஆர் வைத்து எடுத்த படம் RRR. முதல் நாளில் மட்டும் உலக அளவில் 218 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய ரெக்கார்டை படைத்தது இந்த படத்தின் ரெக்கார்டு இதுவரை எந்த ஒரு படமும் முறியடிக்கவில்லை.’
திடீரென்று மாறிய ஓட்டிங் லிஸ்ட்.. பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுபவர் இவரா?
பாகுபலி 2 : பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதிரடியாக உருவானது தான் பாகுபலி 2 பிரபாஸ், அனுஷ்கா, ரானா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். வெளிவந்து 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது முதல் நாளில் மட்டும் உலக அளவில் 205 கோடி வசூல் செய்தது.
கே ஜி எஃப் 2 : பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து சிறு இடைவேளைக்கு பிறகு பார்ட் 2 வெளிவந்தது. படம் எதிர்பார்த்ததை விட ஆக்சன், எமோஷனல் என சற்று அதிகமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் சென்றடைந்தது. அதன் காரணமாக அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்தது முதல் நாளில் மட்டும் KGF 2 படம் உலக அளவில் சுமார் 164 கோடி வசூல் செய்தது.
கரிகாலனை கன் பாய்ண்டில் பிடித்த கில்லி.. சக்தியை வேலைக்காரன் என்று அசிங்கப்படுத்தும் ஜான்சி ராணி
லியோ : லோகேஷ் கடைசியாக எடுத்த விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து விஜய் உடன் கைகோர்த்து லியோ படத்தை எடுத்தார் இந்த படத்திற்காக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர் முதல் நாளில் சுமார் 148 கோடி வசூல் செய்துள்ளது.
5. ஜவான் : அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா – மகன் பாசத்தை எடுத்துரைக்கும் ஒரு படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷன், காமெடி என கலந்திருந்ததால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று 1000 கோடிக்கு மேல் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாளில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.