தென்னிந்திய சினிமா உலகில் வருடத்திற்கு 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவருகின்றன. ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தாத என்றால் அது கேள்விக் குறிதான் மேலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மிக பிரம்மாண்டமான வசூலை அள்ளுவது வழக்கம்.
அந்த வகையில் அண்மையில் வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது அதன் காரணமாக விக்ரம் திரைப்படம் இதுவரை மட்டுமே 380 கோடி வசூல் செய்துள்ளது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் செய்யும் என கூறப்படுகிறது.
இது கமலுக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அவரது கேரியரில் அமைந்துள்ளது மேலும் அதிக வசூல் செய்த திரைப்படமாக கமலுக்கு விக்ரம் திரைப்படம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் மட்டுமே விக்ரம் திரைப்படம் சுமார் 130 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது.
வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என தெரியவருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சென்னை ஏரியாவில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் எது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது அதுகுறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.
முதலிடத்தில் ரஜினியின் 2.0 – 24.65 கோடிகள், இரண்டாமிடத்தில் பாகுபலி 2 – 18.85 கோடிகள், மூன்றாவது இடத்தில் ரஜினியின் பேட்ட 15.68 கோடிகள், நான்காவது இடத்தில் ரஜினியின் தர்பார் 15.18 கோடிகள், ஐந்தாவது இடத்தில் உலகநாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் 15.08 கோடிகள். முதல் ஐந்து இடத்தில் ரஜினி, பிரபாஸ், கமல் போன்றவர்கள் ஆட்சி செய்கின்றனர் இதில் விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.