தொழிலதிபரின் மகள்களை கல்யாணம் செய்து கொண்ட 4 டாப் ஹீரோக்கள் – லிஸ்ட்டில் இருக்கும் தளபதி விஜய்..

vijay
vijay

சினிமா உலகில் நன்றாக சம்பாதிக்கும் நடிகர் நடிகைகள் மிகப்பெரிய பணக்காரர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை இன்னும் அழகு ஆக்கிக் கொள்கின்றனர் அந்த வகையில் டாப் நடிகர்கள் மிகப்பெரிய தொழிலதிபர் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர் அவர்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடுகிறார் இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவரது தந்தை சொர்ணலிங்கம் மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இவர் 2011 ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவரது பெற்றோர் இருவருமே மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார்கள்.

3. மலையாள சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்முட்டி. இவரைத் தொடர்ந்து இவரது மகன் துல்கர் சல்மானும் சினிமா உலகில் கால் தடம் பதித்து தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பல்வேறு படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு தொழிலதிபரின் மகளான  அமல் என்பவரை துல்கர் சல்மான் திருமணம் செய்து கொண்டார்.

4. தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் ராம்சரண் இவரது அப்பா சிரஞ்சீவி மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது ராம்சரண் திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் 2012 ஆம் ஆண்டு அப்போலோ பவுண்டேஷன் நிறுவனர் உபாசானா   காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தையும் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.