நீண்ட நாள் ஆயுளை தரும் ஐந்து உணவு வகைகள்.! இத மட்டும் சாப்பாட்டில் சேர்த்துக்கோங்க..

best food
best food

நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெற்றும் வாழ வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் உண்டு. நமது உடல் நல்லா ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளை பெற்று வாழ்வதற்கு நாம் செய்யும் உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகா மட்டும் போதாது. நாம் உண்ணும் உணவு வகைகளுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் ஒரு சில உணவுகளை நாம் தினசரி உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெற்றும் வாழ்வதற்கு உதவுகிறது. அதில் சிறந்த 5 உணவுப் பொருட்களைப் பற்றி  பார்க்கலாம்.

1. கீரை வகைகள்:  bbநம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள பல்வேறு உணவுப் பொருட்கள் இருந்தாலும் அதில் முதலாவதாக இருப்பது கீரை வகைகள் தான். இதில் நம் உடலுக்கு தேவையான விட்டமீன்ஸ், மினரல்ஸ், டயட்ரி  ஃபைபர்,  ஃபோலிக் ஆசிட் ஆகியவை அடங்கியுள்ளன. இது நம் உடலில் செல்கள் டேமேஜ் ஆவதை தடுக்கவும் புதிய செல்களின் உற்பத்திக்கும், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும்  உதவுகிறது. இது மட்டுமல்லாமல் வயது முப்பு காரணமாக வரக்கூடிய கண் பார்வை குறைபாடு, எலும்பு தேய்மானம் மற்றும் சரும சுருக்கம் போன்றவைகளை  தடுக்கவும் இந்த கீரை வகைகள் உதவுகிறது. தினசரி உணவில் கீரை வகைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு 15.8 சதவீதம் இருதயம் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும் என பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் தினசரி கீரைகளை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

2. கூசிஃபெராஸ் காய்கறிகள் :  கேபேஜ், காலிஃபிளவர் மற்றும் பிரக்கோலி போன்ற காய்கறி வகைகளிள் ஆன்ட்டி ஆக்ஸின் அதிக அளவில் உள்ளது. இந்த வகை காய்கறிகளை உண்பதன் மூலம் மாரடைப்பு, ஸ்டோக்ஸ் போன்ற நோய்கள் வருவதை தடுக்க முடியும். இந்த வகை காய்கறிகளில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், டயட்ரி ஃபைபர் என்ற நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

3.நட்ஸ் வகைகள்:  இந்த வகை உணவுப் பொருள்களில் புரோட்டின் விட்டமின்ஸ் மினரல்ஸ் ஃபைபர் மற்றும் ஆன்ட்டி ஆக்சின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ஒமேகா 3,  ஆல்பா லினோலேனிக் ஆசிட் போன்ற நல்ல கொழுப்பு அமிலங்களும் அடங்கியுள்ளது குறிப்பாக பாதாம் வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் அதிகளவிலான ஒமேகா-3 உள்ளதால் இதனை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு கட்டிகள், ரத்தம் உறைதல் மற்றும் கெட்ட கொழுப்பை கரைத்து மாரடைப்பு வருவதை தடுக்க முடியும் எனவே தினசரி ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் வகைகளை நாம் உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

4. மீன் : அசைவ உணவுகளில் ஆயுளை அதிகரிக்கும் முதன்மையான உணவு என்றால் அது மீன் வகைகள் தான். அதிக அளவில் புரதங்கள்,விட்டமீன்ஸ் மினரல்ஸ், B -12 மற்றும் அதிக அளவிலான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. வாரம் இரு முறை ஒமேகா 3 அதிகம் உள்ள மீன்களை உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய், அல்சைமர் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள். எனவே அசைவ வகை உணவுகளில் மீன்களை நாம் வாரம் இரு முறை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

5. முட்டை : முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என நாம் எல்லோருக்கும் தெரியும் தெரியும். இதில் அதிகப்படியான புரதங்கள் கொழுப்புகள் விட்டமின் A விட்டமின் B, விட்டமின் D போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் இதில் அடங்கி உள்ளது. இதனால் முட்டை ஒரு முழுமையான உணவு என்று கூறலாம். முட்டையில் வேறு எந்த உணவிலும் இல்லாத சத்தான  “கோலின்” என்ற சத்து  அதிகம் நிறைந்துள்ளது. இது இதயத்தின் இரத்த நாளங்களை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஹோமோ சிஸ்டின் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தி மாரடைப்பு வருவதை தடுக்க உதவுகிறது. மேலும் மூலையில் புதிய செல்களை உற்பத்தி  செய்வதற்கும், மூளையின் இயக்கத்திற்கும் இது பெருமளவில் உதவுகிறது.