Tamil Movies: தரமான கதை அம்சத்துடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் படத்தின் நேரம் அதிகமாக இருந்ததால் சுமாரான படமாக அமைந்து டெப்பாசிட்டை இழந்த டாப் 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாபா: ரஜினிகாந்த் நடிப்பில் 2002ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாபா திரைப்படம் ரிலீஸ்சான பொழுது நேரம் 2.58 நிமிடங்கள் இருந்தது அதன் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் பொழுது 30 நிமிடம் கட் செய்யப்பட்டது.
தவமாய் தவமிருந்து: சேரன் நடித்த தவமாய் தவமிருந்து திரைப்படம் தரமான கதை அம்சத்துடன் அமைந்தாலும் பெரிதளவில் பேசப்படவில்லை. இப்படம் 3 மணி நேரம் 30 நிமிடங்களுடன் ரிலீசானது. இப்படம் 2005ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியானது.
லிங்கா: ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் நல்ல படமாக இருந்தாலும் இப்படத்தின் ட்யூரிஷன் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் இருந்ததால் டெப்பாசிட்டை இழந்தது. லிங்கா படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க 2014ஆம் ஆண்டு வெளியானது.
புதுப்பேட்டை: தனுஷ் நடிப்பில் மரண கேங்ஸ்டர் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் புதுப்பேட்டை இப்படத்தின் 3 மணி நேரம் 59 நிமிடங்களுடன் வெளியானது.
ஆயிரத்தில் ஒருவன்: கார்த்தி, பார்த்திபன், அண்ட்ரியா, ரீமாசென் போன்றவர்களின் கூட்டணியில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மற்றும் பாடல்கள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வந்த புதிதில் 3 நேரம் 1 நிமிடம் இருந்துள்ளது அதன் பிறகு 2 மணி நேரம் 22 நிமிடங்களாக மாற்றப்பட்டது.