90 களில் கொடிகட்டி பறந்து டாப் 5 நடிகைகள்.! இப்போவும் ரசிகர்களின் கனவு கன்னி இவங்க தான்..

aishwarya-rai
aishwarya-rai

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆட்டி படைத்து வந்து இன்றும் தனது மார்க்கெட்டை இழக்காமல் இருக்கும் முக்கிய ஐந்து நடிகைகள் யார் யார் என்பதை பற்றி பார்ப்போம்.. 1.மீனா : குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பின்பு 90 கால கட்டங்களில் ஹீரோயின்னாக ரசிகர்கள் மத்தியில் கொடி கட்டி பறந்தவர் மீனா.

இவர் நடித்த பல படங்களும் சூப்பர் ஹிட் ஆகின தற்போதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2.குஷ்பூ : என்பது தொண்ணுறு காலகட்டங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் குஷ்பூ இவர் சின்னத்தம்பி படம் மூலம் பிரபலமடைந்தவர் இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது மற்றும் அப்போது திரை உலகில் குஷ்புவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் இருந்தனர்.

3. ஐஸ்வர்யா ராய் : இவர் தமிழில் இருவர் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு ஓரிரு திரைப்படங்களிலேயே தமிழில் நடித்து பிரபலமடைந்தார் தற்போது அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நந்தினி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த அசத்தியிருந்தார்.

4.ஜோதிகா : தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தார் ஜோதிகா.  பின்பு ஒரு கட்டத்தில் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

5. சிம்ரன் : 90 காலகட்டத்தில் அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தற்போதும் இவர் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் வில்லி வேடங்களிலும் நடித்து வருகிறார். இப்படி இந்த ஐந்து நடிகைகளும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் குடிகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.