சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் ஒன்னு ரெண்டு வெற்றி படங்களை கொடுத்து விட்டால் போதும் அதன் பிறகு அவர்கள் ஆட்டம் ஓவராக இருக்கும் மேலும் அவர்கள் எந்த மாதிரியான காட்சிகள் சொன்னாலும் தயங்காமல் நடிப்பார்கள். குறிப்பாக கிளாமரில் புகுந்து விளையாடுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் கிளாமர் இருந்து வருகிறார்கள் அவர்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தாலும் முதலில் அவர் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தது மலையாளத்தில் தான் அதன் பிறகு தெனிந்திய திரையுலகம் முழுவதும் பலப்பட வாய்ப்புகளை கைப்பற்றி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் இதுவரை கிளாமர் காட்சிகளில் நடிப்பதை முற்றிலுமாக தவித்து வருகிறார். ஏன் லிப் கிஸ் போன்ற விஷயங்கள் வந்தால் கூட நடிக்க மாட்டேன் என மறுக்கிறார் ஆனால் அவரது சினிமா கேரியருக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்தது இல்லை..
2. பிரியா பவானி சங்கர்: கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானார் அதன் பிறகு வெள்ளித்திரை வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றினார் தற்பொழுது வருடத்திற்கு குறைந்தது 56 திரைப்படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இதனால் அவரது மார்க்கெட் சினிமா உலகில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. இவர் இதுவரையிலும் பெரிய அளவில் கிளாமர் கட்டாமல் நடித்து வருகிறார்கள்.
3. நித்யா மேனன் : ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக்கென்று இருப்பதால் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போனார் மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறின இருப்பினும் இவர் கிளாமரை மட்டும் காட்டாமல் திரை உலகில் நடித்து வருகிறார்..
4. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் : தனது சினிமா பயணத்தில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் கிளாமரை சுத்தமாக காட்டாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் ஆனால் இவரது நடிப்பு திறமை ரசிகர்களுக்கு பிடித்து போனதால் அவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்..
5. நடிகை கீர்த்தி சுரேஷ் : இவர் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தாலும் இதுவரை கிளாமரைப் பெரும்பாலும் காட்டாமல் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோயின்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது