Glamour Actress: கிளாமரா நடிக்கும் நடிகைகளுக்கு தான் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து ஏராளமான திரைப்படங்களில் கிளாமராக நடித்து வாய்ப்பை இழந்த ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
மும்தாஜ்: கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலின் மூலம் பயங்கரமாக பேமஸ் ஆகி பிறகு பல திரைப்படங்களில் கிளாமர் ரோலில் நடித்திருப்பார். அப்படி வீராசாமி படத்தில் ஒரு குணசத்திர கேரக்டரிலும் நடித்திருப்பார் ஆனால் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் நீடிக்க முடியவில்லை.
சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. கெத்து காட்டும் அஜித்
ராய் லட்சுமி: கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ராய் லட்சுமி சமீப காலங்களாக பல திரைப்படங்களில் கிளாமராக தான் நடித்து வருகிறார். இவருக்கும் சொல்லும் அளவிற்கு ஹீரோயின் கேரக்டர் கிடைக்கவில்லை.
ஓவியா: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா சில படங்களில் கிளாமராக நடித்திருந்தாலும் சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கிரண்: சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கிரண் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். தற்பொழுது மீண்டும் பட வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக கிரண் பயங்கர கிளாமரான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
நமிதா: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பலமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நமிதா மிகவும் ஃபேமஸான கிளாமர் குயின்னாக கலக்கி வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு சான்ஸ் கிடைக்காத காரணத்தினால் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார் தற்பொழுது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.