அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த டாப் 5 நடிகர், நடிகைகள்..! லிஸ்ட்டில் இருக்கும் கமல் பட நடிகை.

kamal
kamal

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர், நடிகைகள் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போவதால் வெறுத்து போய்  வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடுகின்றனர் அப்படி ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் அமெரிக்காவில் தங்கி இருக்கின்றனர் அவர்கள் குறித்து தான் தற்பொழுது விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..

1. நடிகர் நெப்போலியன் 80,90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர் இவர் ஹீரோ, வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் குறிப்பாக ரஜினிகாந்த் உடன் எஜமான் திரைப்படத்தில் நெப்போலியன் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். அதை தொடர்ந்து திரை உலகில் ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தனது மகனின் உடல் நிலையை பார்த்துக் கொள்ள அவர் தற்பொழுது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதுவும் அவர் அங்கு 300 ஏக்கரில் விவசாயமும் மற்றும் பிசினஸும் மேலும் பார்த்து வருகிறார்.

2. இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிக்க வந்தவர் அபிராமி இவர் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்தார் குறிப்பாக 2004 ஆம் ஆண்டு விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டு எங்கும் பிரபலமடைந்தார் ஆனால் அதன் பிறகு சொல்லும் படி வாய்ப்புகள் கிடைக்காததால் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் தற்பொழுது ஒன்று இரண்டு பட வாய்ப்புகள் தமிழில் எட்டிப் பார்க்கின்றன.

3. பூஜா குமார் சினிமா உலகில் விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களில் நடித்துள்ளார். ஒரு இடத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் ஆனால் கமலஹாசன் அவரது நடிப்பு திறமையை பார்த்து அவரை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு இழுத்தார் அந்த வகையில் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் ஆகிய படங்களில் கமலுடன் நடித்தார்.

4. நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், விஷால், மாதவன் போன்ற டாக் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். இப்படி சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் ஆண்மை காலமாக பட வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.

5. திவ்யா உன்னி மலையாள நடிகையான இவர் தமிழில் வேதம் திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ளார்.