தளபதி விஜய் தற்போது வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் அவருக்கு 66 ஆவது படம். வாரிசு தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது இதனை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் காமெடி போன்ற அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது ஏனென்றால் இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
வாரிசு படத்தை திரையரங்கில் காண விஜய் ரசிகர்கள் செம்ம ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டரை தெறிக்க விடப் போகிறார்கள்.
இந்த நிலையில் வாரிசு படம் குறித்து ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முதலில் இந்த கதையை மகேஷ் பாபுவிடம் கூறினாராம். அவர் இதை மறுக்க பின்பு ராம்சரனிடம் கூறினார் அவரும் அப்போது ஷங்கர் படத்தில் பிசியாக இருந்ததால் இந்த கதையை மறுத்து விட்டார்.
பின்பு இந்த கதையை பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரிடம் கூறினார் அவர்களும் மறுக்க கடைசியாக தில் ராஜு இந்த கதையை விஜய் இடம் கூறியுள்ளார் விஜயும் இதில் நடிக்க ஓகே சொல்லி நடித்துள்ளார்.