2022 – சென்னை ஏரியாவில் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய டாப் 12 திரைப்படங்கள்..! முதல் இடத்தில் யார் தெரியுமா.?

tamil actors
tamil actors

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த படங்களை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவதால் படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துகின்றன அந்த வகையில் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு போன்றவர்கள் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் 2022 ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை வெளியான முன்னணி நடிகர்கள் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான் ஆனால் அந்த படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அண்மையில் பார்த்தோம் தற்பொழுது சென்னை ஏரியாவில் முன்னணி நடிகரின் படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

சென்னை ஏரியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருப்பது விஜயின் பீஸ்ட் திரைப்படம் தான். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படம் சென்னை ஏரியாவில் முதல் நாளில் மட்டும் சுமார் 1.96 கோடி வசூலித்துள்ளது.

இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் அஜித்தின் வலிமை இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது சென்னை ஏரியாவில் முதல் நாளில் மட்டும் சுமார் 1.82 கோடி வசூலித்து அசத்தியது.

மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது கமலின் விக்ரம் திரைப்படம் இந்த படம் ஆரம்பத்தில் சுமாரான வசூலை அள்ளினாலும் போகப்போக பிரமாண்டமான வசூலை அள்ளியது விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சென்னை ஏரியாவிலும் நல்ல கலெக்ஷனை அள்ளியது. சென்னையில் முதல் நாளில் கமலின் விக்ரம் திரைப்படம் 1.71 கோடி அள்ளியது.

அதனைத் தொடர்ந்து  RRR – 1.17 கோடி, கோப்ரா  – 1.14 கோடி, வெந்து தணிந்தது காடு – 94 லட்சம், டான் – 92 லட்சம், திருச்சிற்றம்பலம் – 79 லட்சம், கே ஜி எஃப் 2 – 68 லட்சம், காத்து வாக்குல ரெண்டு காதல்  – 66 லட்சம், எதற்கும் துணிந்தவன் – 62 லட்சம், விருமன் – 56 லட்சம்.