சினிமாவில் நடிகர்கள்தான் பல கோடி சம்பளம் வாங்கி வருகின்றனர். எனவே இதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கின்றனர் அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகர்களின் 10 லிஸ்ட்டை பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வருபவர்கள் என்றால் ரஜினி, விஜய், அஜித் போன்றவர்களை சொல்லலாம் இவர்களை விட குறைவாக சம்பளம் வாங்கும் நடிகர் ஒருவர் பணக்கார பட்டியலில் இடம் பெற்றுள்ளார் அது வேறு யாருமில்லை தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா தான்.
நாகர்ஜுனா: தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட், ஹோலிவுட் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகர் நாகார்ஜுனா நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கென ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு இடம் இருந்து வரும் நிலையில் இவர் ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அந்த வகையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 3ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
வெங்கடேஷ்: டோலிவுட்டியில் பிரபல நடிகரான வெங்கடேஷ் தெலுங்கில் இதுவரையிலும் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிப்பது மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வரும் நிலையில் 2200 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறாராம்.
சஞ்சீவி: தெலுங்கில் முக்கிய நடிகரான சிரஞ்சீவி மெகா சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டுகிறார். இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் 1650 கோடி மதிப்பிலான சொத்தை வைத்திருக்கிறார்.
ராம்சரண்: 2007ஆம் ஆண்டு வெளியான சிறுத்தை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ராம்சரண் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் இவருடைய படங்களுக்கு மக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி இந்த பணக்கார லிஸ்டில் 4வது இடத்தைப் பெற்றுள்ள இவர் 1370 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளார்.
இவ்வாறு இவர்கள் தொடர்ந்து 5வது இடத்தில் ஜூனியர் என்டிஆர் ரூபாய் 450 கோடி சொத்து மதிப்பும், 6வது இடத்தில் விஜய் ரூபாய் 445 கோடி சொத்து மதிப்பும், 7வது இடத்தில் ரஜினிகாந்த் ரூபாய் 430 கோடி சொத்து மதிப்பும், 8வது இடத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் 9வது மோகன்லால் இவர்களை தொடர்ந்து 10வது இடத்தில் ரூபாய் 388 கோடி சொத்து மதிப்புடன் கமலஹாசன் இடம்பெற்றுள்ளனர்.