டாப் 10 இந்திய திரைப்படங்களை வெளியிட்டது IMDB நிறுவனம்.! லிஸ்டின் இடம்பிடித்த வாரிசு, பொன்னியின் செல்வம் 2.!

top 10 list in imdb
top 10 list in imdb

IMDB இணையதளம் இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்த டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளது இந்த லிஸ்டில் வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2 முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

ஒரு வருடத்தில் பல திரைப்படங்கள் வெளியாகிறது அந்த வகையில் ஒவ்வொரு திரைப்படமும் எப்படி இருக்கிறது என்பதை ஒவ்வொரு இணையதளமும் மதிப்பீடு செய்து அந்த லிஸ்ட்டை வெளியிடும் அந்த வகையில் உலக அளவில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடருக்கான மதிப்பீடுகளை நிர்ணயித்து வருகிறது ஐ எம் டி பி என்ற இணையதளம்.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் டாப் 10 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறது அப்படித்தான் 2023 ஆம் ஆண்டுக்கான திரைப்படங்களின் லிஸ்ட்டை தயார் செய்துள்ளது அது மட்டும் இல்லாமல் உலக அளவில் கவனம் ஈர்த்த திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பட்டியலை தற்போது ஐ எம் டி பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஃபார்ஸி’ தொடர் இரண்டாம் இடம் பிடித்திருந்தது. அந்த வகையில் இந்திய அளவில் டாப் 10 திரைப்படங்களின் பட்டியலையும் ஐ எம் டி பி நிறுவனம் வெளியிட்டுள்ளது இதில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகிய பதான் திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை சல்மான் கான் நடித்த ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ திரைப்படம் பிடித்துள்ளது, அதேபோல் மூன்றாவது இடத்தில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படமும், நான்காவது இடத்தில் ‘து ஜூத்தி மெய்ன் மக்கார்’ என்ற படமும், ஐந்தாவது இடத்தில் மிஷன் மஜ்னு என்ற திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் ஆறாவது இடத்தில் “ சோர் நிக்கல் கே பாகா” என்ற திரைப்படம் இடம்பெற்றுள்ளது, ஏழாவது இடத்தில் ‘ப்ளடி டாடி’ என்ற படமும், எட்டாவது இடத்தில் ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹே’ என்ற தலைப்பில் திரைப்படமும் இடம் பெற்றுள்ள நிலையில் ஒன்பதாவது இடத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் பத்தாவது இடத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் இடம் பெற்றுள்ளது. தமிழில் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.