சினிமாவில் எப்பொழுதும் நடிகர்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது அதே போல் நடிகைகளுக்கும் போட்டி இருப்பது இலை மறை காயாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ஹிந்தி சினிமா ஹீரோக்களின் ஆதிக்கம் குறைந்தது போல் ஹீரோயின்களின் ஆதிக்கமும் குறைந்துள்ளது.
இப்படி முன்னிலையில் தென்னிந்திய நடிகர்கள் இடம் பிடித்தார்கள் அதேபோல் தென்னிந்திய நடிகைகள் தான் முன்னிலையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர்களை டாப் டென் லிஸ்டில் வரிசைப்படுத்தி பல நிறுவனங்கள் ரேட்டிங்கை வெளியிட்டு வருகிறார்கள் அதே போல் நடிகைகளுக்கும் டாப் டென் லிஸ்ட்டை தயாரித்து பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இவர்களை டாப் டென் லிஸ்டில் ரேட்டிங் பொருத்துதான் வரிசைப்படுத்தி வெளியிடுகிறார்கள் இந்த நிலையில் ormax என்ற நிறுவனம் டாப் 10 நடிகைகளின் லிஸ்ட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளது. எப்பொழுதும் முன்னிலையில் பாலிவுட் நடிகைகள் தான் இருப்பார்கள் ஆனால் சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் முதலிடத்தை பிடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் முதலிடத்தில் நடிகை சமந்தா இருந்து வருகிறார் தென்னிந்திய நடிகை முதலிடத்தில் பிடித்திருப்பதால் சினிமா பிரபலங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதேபோல் தென்னிந்திய ரசிகர்களும் சமந்தா முதல் இடத்தில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இரண்டாவது இடத்தில் ஆலியா பட் மூன்றாவது இடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
என்னதான் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்தாலும் நயன்தாராவால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நான்காவது இடத்தில் காஜல் அகர்வால், ஐந்தாவது இடத்தில் தீபிகா படுகோனே, ஆறாவது இடத்தில் ராஷ்மிகா மந்தனா, ஏழாவது இடத்தில் கத்ரீனா ஃப் எட்டாவது இடத்தில் அனுஷ்கா ஷெட்டி ஒன்பதாவது இடத்தில் கீர்த்தி சுரேஷ் பத்தாவது இடத்தில் திரிஷா.
திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார் அதனால் 10 வது இடத்தில் திரிஷா பிடித்தார் விரைவில் இன்னும் அதிக ரேட்டிங் பெற்று வேற இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ormax Stars India Loves: Most popular female film stars in India (Oct 2022) #OrmaxSIL pic.twitter.com/UO7Deu3X05
— Ormax Media (@OrmaxMedia) November 22, 2022