தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த திரைப்படங்கள் அனைத்தும் மக்களை கவர்ந்து எடுத்ததா என்றால் அது கேள்விக்குறி தான். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்கள் எப்படியோ வசூல் வேட்டை நடத்தி விட்டாலும் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பிடித்த திரைப்படங்களா என்றால் அது கேள்விக்குறி தான்..
சினிமா உலகில் ஒரு திரைப்படம் நல்ல திரைப்படம் என்றால் அந்த படத்தின் கதை இதற்கு முன்பு வந்திருக்கக் கூடாது அதேபோல புதியதாக இருந்தால் அந்த படம் சிறப்பான படமாக பார்க்கப்படும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் மக்களை கவர்ந்து அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்ன என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
முதல் 10 இடத்தை எந்த திரைப்படங்கள் பிடித்துள்ளன என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம் குறிப்பாக இந்த லிஸ்டில் அஜித் , விஜய் நடிகர்களின் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை IMDB நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
அதுபோல தற்பொழுது இந்த நிலவரத்தையும் வெளியிட்டுள்ளது முதல் இடத்தில் இருப்பது கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த அன்பே சிவம் இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் வேட்டை நடத்த தவறியது இந்த படம் 8.4 ரேட்டிங் பெற்றது.
இரண்டாவது இடத்தில் கமலின் நாயகன் 8.4, மூன்றாவது இடத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் 8.4, நான்காவது இடத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிரட்டிய ஜெய் பீம் திரைப்படம் 8.4, ஐந்தாவது இடத்தில் கமலின் தேவர் மகன் 8.3, ஆறாவது இடத்தில் சூரரை போற்று 8.3, ஏழாவது இடத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் 8.3, எட்டாவது இடத்தில் விசாரணை 8.3, ஒன்பதாவது இடத்தில் ரஜினியின் தளபதி 8.3, பத்தாவது இடத்தில் தனுஷின் அசுரன் 8.3,