2023ல் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.. தலையை மிஞ்சிய தளபதி

thunivu
thunivu

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் விஜய்யின் படங்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்பொழுது ஆறு மாதங்கள்  முடிந்திருக்கும் நிலையில் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் வெளியாகி நல்ல சாதனையை படைத்து உள்ளது. அப்படி 6 மாதங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.

அதாவது 2023 இதுவரையிலும் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்களில் எவையெல்லாம் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது அது குறித்த டாப் 10 லிஸ்ட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜய் மற்றும் அஜித் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சினை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியான நிலையில் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு இரண்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினத்தில் கனவு படமான இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன். முதல் தாக்கத்தைப் போல இரண்டாவது பாகம் அமையவில்லை இந்த படத்தில் முன்னணி நடிகர்களான கார்த்தி, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் நல்ல வசூல் சாதனையை படைத்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான சிம்புவின் பத்து தல, வெற்றிமாறானின் விடுதலை, உதயநிதியின் கடைசி படமாக சமீபத்தில் வெளியான மாமன்னன், தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் வெளியான தனுஷின் வாத்தி போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வசூல் வேட்டையை நடத்தியது.

இதனை எல்லாம் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2, டாடா, போர்தொழில் போன்ற படங்களும் சிறப்பான வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. இவ்வாறு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்திருக்கும் நிலையில் அதில் முதலிடத்தில் வாரிசு, 2வது இடத்தில் பொன்னியின் செல்வன் 2, மூன்றாவதாக துணிவு, விடுதலை, மாமன்னன், வாத்தி, போர் தொழில், பத்து தல, பிச்சைக்காரன் 2, டாடா என வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது.