ஆந்திராவில் அலப்பறை பண்ணிய டாப் ஹீரோக்கள்.. அங்கு அதிகம் வசூலித்த 10 தமிழ் திரைப்படங்கள்.! ஓர் பார்வை

Tamil Actors
Tamil Actors

Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் எப்பொழுதுமே பெரிய வசூலை அள்ளும் அதற்குக் காரணம் தமிழை தாண்டி அவருக்கு பிற இடங்களில் அதிக ரசிகர்கள் இருப்பது தான் அப்படி ஆந்தராவில் அதிகம் வசூல் செய்த 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியான ரஜினியின் “2.0” திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது இந்த படம் ஆந்திராவில் சக்க போடு போட்டு முதலிடத்தை பிடித்துள்ளது அங்கு மட்டுமே 95 கோடி வசூல் செய்தது. இரண்டாவது இடத்திலும் ரஜினி தான் “எந்திரன்” திரைப்படம் சுமார் 65 கோடி வசூல் செய்தது.

மூன்றாவது இடத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான “ஐ” திரைப்படம் ஆந்திராவில் சுமார் 54 கோடி வசூல் அள்ளியது. நான்காவது இடத்தில் மீண்டும் ரஜினி இருக்கிறார் அவரின் “ஜெயிலர்” திரைப்படம் 6 நாளில் மட்டுமே அங்கு 49 கோடி வசூல் செய்துள்ளது வருகின்ற நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது இடத்தில் தனுஷின் “வாத்தி” திரைப்படம் இருக்கிறது ஆம் அங்கு மட்டும் 41 கோடி வசூல் செய்துள்ளது ஆறாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கபாலி” திரைப்படம் 39 கோடி வசூல் செய்துள்ளது ஏழாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான “காஞ்சனா 3” இருக்கிறது 36.80 கோடி வசூல் செய்துள்ளது.

எட்டாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் நீடிக்கிறார் “காஞ்சனா 2”  32 கோடி வசூல் செய்துள்ளது ஒன்பதாவது இடத்தில் கமலின் “விக்ரம்” இருக்கிறது. பத்தாவது இடத்தில் ரஜினியின் “சிவாஜி” திரைப்படம் 30 கோடியும் வசூல் செய்துள்ளது இந்த 10 இடத்தில் ரஜினி ஐந்து இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.