சினிமா உலகில் நல்ல படங்கள் வெளிவந்து மிகப்பெரிய வசூலை பதிவு செய்கிறது அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த 10 திரைப்படங்கள் எது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. வரலாற்று மற்றும் உண்மைச் சம்பவங்களை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் மணிரத்தினம். இவர் பொன்னியின் செல்வன் நாவலை கதையாக எடுக்க பல தடவை முயற்சி செய்தார் ஆனால் தோல்விகள் மட்டுமே அவர் சந்தித்தார் கடைசியாக லைக்கா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ஒரு வழியாக “பொன்னியின் செல்வன்” படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தார் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வசூலை அள்ளி முதலிடத்தில் இருக்கிறது.
2. ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான “ஜெயிலர்” திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படம் பொன்னியின் செல்வன் 1 படத்தின் வசூலை முறியடிக்க அதிக வாய்ப்புகளில் இருக்கிறது தற்பொழுது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
3. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் லோகேஷ் உடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் “விக்ரம்”. இந்த படம் முழுக்க முழுக்க போதை பொருள் கும்பலை கமல் வேட்டையாடும் படமாக இருந்தது படம் சிறப்பாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி இந்த இடத்தை பிடித்திருக்கிறது.
4. பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்து உள்ள ராஜமௌலி, பாகுபலி 1, 2 RRR ஆகிய படங்கள் அனைத்துமே 500 கோடிக்கு மேல் வசூல் அல்லின அந்த வகையில் ராஜமௌலியின் பாகுபலி 2 திரைப்படம் தமிழில் அதிக வசூல் அள்ளி இந்த இடத்தை பிடித்திருக்கிறது.
5. தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வரும் நடிகர் விஜய் வம்சியுடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் வாரிசு இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலை அள்ளியது இந்த இடத்தை தக்க வைத்துள்ளது.
6. பொன்னியின் செல்வன் பார்ட் 1 மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் சில மாதங்கள் கழித்து வெளியானது படம் சிறப்பாக இருந்தாலும் முதல் பாகத்தின் வசூலை இதனால் முறையடிக்கவில்லை. டாப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
7. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் இவர் விஜய் உடன் கைகோர்த்து முதலில் எடுத்த திரைப்படம் மாஸ்டர் படம் முழுக்க முழுக்க ஆக்சன்னாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இதன் மூலம் அதிக வசூல் செய்தது.
8. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில் படம் கால்பந்து சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி அதிக நாட்கள் ஓடியது. வசூலிலும் அடித்து நொறுக்கியது.
9. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தால் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடி வசூல் பட்டியலில் இந்த இடத்தை தக்க வைத்துள்ளது.
10. இந்த இடத்திற்கு பல படங்கள் போட்டியிடுகின்றன அதன்படி துணிவு, மெர்சல், சர்க்கார், 2.0 போன்ற படங்கள் இருக்கின்றது.