2023 முதல் பாதியில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்..! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா.?

vijay
vijay

இந்த 2023 ஆம் ஆண்டு சினிமாத்துறைக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது. இவர்களின் படங்களைத் தொடர்ந்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், வெற்றிமாறனின், விடுதலை..

சிம்புவின் பத்து தல போன்ற பல சிறந்த படங்கள் இந்த ஆறு மாதத்திற்குள் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் கடந்த ஆறு மாதத்தில் திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் படைத்த டாப் 10 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் விஜயின் வாரிசு திரைப்படம் 146.10 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 140.70 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் அஜித்தின் துணிவு படம் 116.40 கோடி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

நான்காவது இடத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை திரைப்படம் 40.20 கோடி பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் 38 கோடி பெற்றுள்ளது. ஆறாவது இடத்தில் தனுஷின் வாத்தி 35.20 கோடியும், ஏழாவது இடத்தில் சரத்குமார் அசோக் செல்வன் கூட்டணியில் வெளியான போர் தொழில் திரைப்படம் 26 கோடி பெற்றுள்ளது. எட்டாவது இடத்தில் சிம்புவின் பத்து தல திரைப்படம் 25.80 கோடி பெற்றுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் 20.30 கோடியும், பத்தாவது இடத்தில் கவினின் டாடா திரைப்படம் 20.20 கோடியும் தமிழகத்தில் பெற்றுள்ளன. சர்வதேச அளவில் இந்த படங்களில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் அதிகமாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் இந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளன.