லேடி சூப்பர் ஸ்டாரை எட்டி உதைப்பேன் எனக் கூறிய பிரபல நடிகரின் மனைவி முதல் ஆண்ட்டி வரை.. நயன்தாரா சந்தித்த டாப் 10 சர்ச்சைகள்

nayanthara-
nayanthara-

தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கைவசம் தற்பொழுது ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக ஜவான் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடும் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது இரு ஆண் மகன்கள் இருக்கின்றனர் இதனால் நயன்தாரா சினிமா, வாழ்க்கை என இரண்டையும் நல்லபடியாக பார்த்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா திரையுலகில் சந்தித்த டாப் 10 சர்ச்சைகள் என்னென்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. நயன்தாரா சிம்புவை காதலித்த போது அவர்கள் இருவரும் படுகைய அறையில் லிப்லாக் அடித்த புகைப்படம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2. பிரபுதேவாவை நயன்தாரா காதலித்த பொழுது அவர் சினிமாவை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் பெரிய அளவில் கிளம்பின. 3. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆத்திரமடைந்த பிரபுதேவாவின் மனைவி நயன்தாராவை ஏடி உதைப்பேன் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

4. நயன்தாராவும், உதயநிதியும் தொடர்ந்து படங்களில் ஜோடியாக நடித்து வந்ததால் அவர்களைப் பற்றிய காதல் வதந்தி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 5. பிரபல முன்னணி நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி இழிவாக பேசியது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு நயனும் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. நயன்தாராவும், ஆர்யாவும் ராஜா ராணி திரைப்படத்தில் நடித்தனர் இந்த திரைப்படத்திற்காக இருவரும் திருமண கோலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியது இதை பார்த்த பலரும் உண்மையாலும் இருவருக்கும் கல்யாணம் ஆகியது என பெரிய சர்ச்சையை கிளப்பினர்.

7. சூர்யாவின் மாஸ் படத்தில் நடித்த போது தன்னை ஆண்ட்டி என கூப்பிட்ட பிரேம்ஜியை நடிகை நயன்தாரா எச்சரித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 8. நானும் ரவுடிதான் படத்தின் பட்ஜெட் ஏகியதால் தனுஷ் அந்த படத்தை பாதியில் நிறுத்த பின்னர் நயன்தாரா தன் சொந்த காசை போட்டு அந்த படத்தை எடுத்ததாக கூறப்பட்டது.

9. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருமணம் செய்து கொண்ட பிறகு இருவரும் திருப்பதி சாமி தரிசனம் செய்ய சென்ற பொழுது அங்கு கோவில் வளாகத்தில் செருப்பு அணிந்து வந்து சர்சையில் சிக்கினார் நயன்தாரா. 10. திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நான்கே மாதத்தில் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.