பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு முகபாவனை இருக்கிறதோ இல்லையோ அது கவலை இல்லை ஆனால் நடிகைகளுக்கு அழகும் முகபாவனையும் இருந்தே ஆக வேண்டும். இதனாலேயே பல நடிகைகள் தங்கள் அழகின் மேல் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மேலும் தனது முகபாவனையை அழகாக மாற்றிக் கொண்டு உள்ளனர். இப்படி தனது அழகுக்கு அழகு சேர்த்த 10 நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ஐஸ்வர்யா ராய் :- நடிகை ஐஸ்வர்யா ராய் அன்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் இவர் தனது அழகை மேலும் அழகுபடுத்த லிப் பில்லர்ஸ், பேசியல் பில்லர்ஸ், மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் :- தமிழ் சினிமாவில் உலகநாயகன் எனப் போற்றப்படும் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் உதடு மற்றும் மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதை நடிகை சுருதிஹாசன் பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா:- தற்போது கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா தனது அழகை மெருகேற்ற கண்ணம், மூக்கு, லிப் பில்லர்களை அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
நயன்தாரா:- தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்று நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் அறுவை சிகிச்சை செய்ததால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது என பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது. அப்படி இவர் எதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என்றால் சினிமாவில் ஒரு முன்னணி அந்தஸ்தில் இருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தனது அழகை மேலும் அழகு படுத்தி உள்ளார். அப்படி தனது உடல் எடையை குறைக்க லிபோசக்ஷன் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்கா செட்டி :- தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்டா பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா இவரை இஞ்சி இடுப்பழகி என பலரும் அழைத்து வந்தனர். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா செட்டி சினிமாவில் இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூடினார். இதனால் நடிகை அனுஷ்காவுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. உடல் எறியது காரணமாக நடிகை அனுஷ்கா ஷெட்டி லிபோபெட் என்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஸ்ரீதேவி கபூர் :- நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்த ஸ்ரீதேவி வெளிநாட்டில் இருந்து வரும்பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் தென் இந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமாவிற்கு சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு மூக்கு மற்றும் உதடு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்த ஸ்ரீதேவி மார்பகப் பகுதியை அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் உடல்நிலை ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் இந்த சம்பவம் சினிமாவில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
கங்கனா ரனாவத் :- ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் உதடு, மார்பகம், மற்றும் கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
அனுஷ்கா சர்மா :- பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை அனுஷ்கா சர்மா உதடு பெரிதாவதற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா:- பாலிவுட்டில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்த நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் புகழ்பெற்றவராக மாறியுள்ளார். இவர் மூக்கு மற்றும் உதடு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
காஜல் அகர்வால்:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய மூக்கை அறுவை சிகிச்சை செய்து உள்ளார்.