100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் – பிளாப் படம் கொடுத்தாலும் சம்பளத்தை குறைக்காத ஹீரோ..

actors
actors

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.  அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் பத்து நடிகர்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

1. பிரபாஸ் : பாகுபலி, பாகுபலி 2 படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்தது. மேலும் இவர் நடிக்கும் படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன அதன் காரணமாக தனது சம்பளத்தையும் உயர்த்தி கொண்டார் தற்பொழுது ஒரு படத்திற்கு இவர் 150 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ராதே ஷியாம் படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

2. விஜய் : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்போ ஒரு படத்திற்கு சுமார் 125 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

3. அஜித் : இவர் சமிபகாலமாக ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இதுவரை 100 கோடிக்கு கீழ் சம்பளம் வாங்கி வந்த இவர் தனது 62 வது திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்க உள்ளார் என்பது உங்களது.

4. ரஜினி : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டு ஓடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடந்த சில வருடங்களாக 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார் இவர்  அண்ணாத்த படத்திற்கு முன்பாக 120 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தார் தற்பொழுது இவர் தனது சம்பளத்தை குறைத்து 110 கோடி சம்பளம் வாங்குகிறார்.

5. கமல் : கடந்த நான்கு வருடங்களாக படமே பண்ணாமல் இருந்த உலக நாயகன் கமலஹாசன். லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து கடைசியாக நடித்த  திரைப்படம் விக்ரம்.  வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்தது அந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது கமலுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன முதலாவதாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தில் நடிக்க அவர் சுமார் 130 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

6. அல்லு அர்ஜுன் : இவர் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வருகிறார். இவர் கடைசியாக நடித்த புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று அசத்தியது அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் அந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் சுமார் 100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

7. ராம்சரண் :  RRR படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 15 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்காக ராம்சரண் 100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

8. சல்மான் கான் : ஹிந்தியில் மிகப்பெரிய ஒரு டாப் நடிகராக இருந்து வருகிறார்.  இவர் கடைசியாக நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தாலும் மார்க்கெட் மட்டும் குறையாமல் இருந்து வருகிறது. இப்போ ஒரு படத்திற்கு 125  கோடி சம்பளம் வாங்குகிறார்.

9. அகஷய் குமார் : பாலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர். இவர் கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் சம்பளம் மட்டும் குறையவில்லை. தற்போது ஒரு படத்திற்கு 130 கோடி முதல் 120 கோடி வரை வாங்குவதாக சொல்லப்படுகிறது.

10. ஷாருக்கான்  : நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ஜவான். அதனைத் தொடர்ந்து  பதான் படத்தில் நடித்த வருகிறார். இப்போது 100 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.