Vijayakanth : தமிழ் சினிமாவில் இன்று டாப் ஹீரோக்களாக விளங்கும் விஜய், சூர்யா. வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் விஜய் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து உள்ளார். சூர்யா வணங்கான் படம் டிராப் ஆனதை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து கங்குவா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்பொழுது இருவரும் தனக்கான பாதையை சரியாக தேர்ந்தெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஆரம்பத்தில் விஜய் சூர்யாவை தூக்கிவிட்டு அழக பார்த்த அவர் கேப்டன் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 80, 90 காலகட்டங்களில் விஜயகாந்த் மிகப்பெரிய ஒரு டாப் ஹீரோவாக இருந்தாலும் அந்த சமயங்களில் விஜய் மற்றும் சூர்யாவை படங்களில் நடித்து அவர்களையும் வளர்த்து விட்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
விஜயகாந்த் இயல்பாகவே உதவி செய்யும் குணம் கொண்டவர் அப்படிதான் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என அனைவரிடமும் உதவி செய்து நல்ல முறையில் இருந்துள்ளார் இவர் எஸ்.ஏ. சந்திரசேகர் உடன் நல்ல நட்பில் இருந்ததால் அவருடன் கைகோர்த்து 15 படங்களுக்கு மேல் பண்ணினார்.
அதில் ஒன்றுதான் செந்தூரப்பாண்டி. இந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை விஜய்க்காக நடித்துக் கொடுத்தார். இந்த படம் வெளிவந்து விஜய்க்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது அதேபோல் சூர்யா ஜோதிகா நடிப்பில் உருவான மாயாவி படத்தில் சூர்யாவின் விருப்பத்துக்கு இணங்க அந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
விஜயகாந்த் இதே போல சூர்யா நடிப்பில் உருவான பெரியண்ணா திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உச்சத்தில் இருந்த பொழுதும் தன்னை நம்பி வந்தவர்களுக்கும் மற்றவர்களை தூக்கி விடவும் விஜயகாந்த் எப்பொழுதுமே உறுதுணையாக இருந்தவர் அதற்கு எடுத்துக்காட்டு இது கூட சொல்லலாம்..