Vijay Salary : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த லியோ படக்குழு இசை வெளியீட்டு விழா, டிரைலர் போன்றவற்றையும் வெளியிட இருக்கிறது. லியோ படத்தை முடித்ததை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குணசத்திர நடிகர் மீசை ராஜேந்திரன் விஜயின் சம்பளம் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. விஜய் முதன்முதலில் 70 கோடி சம்பளம் வாங்கியது சிம்புதேவன் இயக்கிய புலி படத்துக்கு தான் செல்வகுமார் என்பவர் தான் அந்த படத்தை தயாரித்திருந்தார்.
அந்த செல்வகுமார் வேறு யாரும் அல்ல.. நடிகர் விஜய்யிடம் மேனேஜராக பணியாற்றியவர் தான் அவருக்கு எப்படி அவ்வளவு பெரிய படத்தை தயாரிக்க காசு வந்தது. அந்தப் பணம் அனைத்துமே விஜய் உடையது தான் அவர் பணத்தையே கொடுத்து படத்தை எடுத்து அதற்கு 70 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள் அதன் மூலம் அவரின் மார்க்கெட்டும் ஏற ஆரம்பித்தது இதே பார்முலாவை தான் மாஸ்டர் படத்திலும் பயன்படுத்தினார்.
விஜய் மாஸ்டர் படத்தை தயாரித்தது நடிகர் விஜயின் தாய் மாமா சேவியர் பிரிட்டோ என்பது அனைவரும் அறிந்தது தான்.. அந்த படத்தை எடுக்க அவர் செலவழித்தது எல்லாம் விஜய் ஓட பணம் தான் இப்படி ஒவ்வொரு படத்துக்கும் விஜய் தான் சம்பாதித்த பணத்தை கொடுத்து தன் சம்பளத்தை உயர்த்திக்கொண்டார் அதனால் தான் அவருடைய சம்பளம் தற்போது 100 கோடியை தாண்டி விட்டது என மீசை ராஜேந்திரன் பேசி உள்ளார்.