ஈரோடு மாவட்டம் அந்தியூர் பக்கத்தில் வெள்ளிதிருப்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் அதே பகுதியை சேர்ந்த தரணி என்ற பெண்ணை இரண்டு வருடமாக உருகி உருகி காதலித்து வந்துள்ளார், இத நிலையில் இரு வீட்டாருக்கும் இவர்களின் காதல் விவரம் தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தார்கள் அதனால் இருவரும் சித்தார் அருகே உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பிற்காக பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.
அதேபோல் குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மதன்ரஜ் என்பவர் புணர்ச்சி பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி என்ற பெண்ணை கடந்த 12 மாதங்களாக காதலித்து வந்துள்ளார் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டைவிட்டு ஓடிவந்து திருப்பூர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்கள்.
அதேபோல் பவானி நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திருச்செங்கோட்டை சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்கள் இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால் கோவிலில் திருமணம் செய்துகொண்டு தங்களின் உயிர் பாதுகாப்பிற்கக பவானி மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார்கள்.
இந்த நிலையில் மூன்று காதல் ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்த சமரச பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார்கள் போலிசார் இருப்பினும் மணமகள் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடிகளை மணமகன் வீட்டார் உடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளார்கள். இன்று திருமண நாள் என்பதால் ஒரே நாளில் மூன்று காதல் ஜோடிகள் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அந்தப் பகுதியில்.