விஜய்-சங்கீதா திருமண நாளை கொண்டாடும் ரசிகர்கள்.! அண்ணி சங்கீதாவை தெறிக்க விடும் ரசிகர்கள்..

vijay
vijay

Actor Vijay: தளபதி விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சோசியல் மீடியாவில் #Sangeetha என்ற ஹாஷ் டேக்கை தளபதி ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர். தனது அப்பா அம்மாவை பிரிந்து விஜய் தனது மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு ஏற்கனவே விஜய் எஸ்.கே. சந்திரசேகரன் இருவருக்கும் பிரச்சனை இருப்பதாகவும் அவர்களிடம் பேசாமல் இருந்து வருகிறார் என தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து சமீப காலங்களாக நடிகர் விஜய்க்கு சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் இது அனைத்தும் வதந்தி என தெரியவந்தது சங்கீதா விஜய் இருவருக்கும் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று திருமணமானது. விஜய்யை பார்ப்பதற்காக வந்த சங்கீதா பிறகு இவர்களுக்கு பிடித்துப்போனதால் குடும்பத்தினர்கள் பேசி திருமணம் செய்து வைத்தனர்.

24 ஆண்டுகள் ஒன்றாக திருமண வாழ்க்கையை நடத்தி வரும் இந்த தம்பதியினர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள். சங்கீதா சமீப காலங்களாக பெரிதாக வெளியில் வராமல் இருந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தினை நேரில் சென்று பார்த்தார்.

மேலும் இதனை அடுத்து விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சங்கீதா வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.‌ இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள் #Sangeetha ஹாஷ்டேக்கில் விஜய்யுடன் சினிமா விழாக்களில் கலந்துக் கொண்டு வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் தளபதி விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தங்களது திருமண நாளை வெளிநாட்டில் குழந்தைகளுடன் கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இவர்களுடைய திருமண நாள் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.