அஜித் ரசிகர்கள் மறக்க முடியாத நாள் இன்று.? என்னன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க

ajith

நடிகர் அஜித்குமார் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் சமூக அக்கறை கலந்த படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில்  நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக தனது 62வது திரைப்படத்தில் நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு முன்பாக அஜித் பல்வேறு இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அஜித் பற்றிய செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருவது வழக்கம் அதன்படி இன்று அஜித்தும் சரி, அஜித் ரசிகர்களும் மறக்க முடியாத நாள் இன்று.. நடிகர் அஜித்குமார் 29. 4. 2011 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் சொன்னது..

வணக்கம் பல! அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50 -வது திரைப்படமாக வெளிவர உள்ளது எனது இந்த திரை பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் நடிகர், நடிகையர் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஊடக நண்பர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்திற்கும்..

இந்த அறிக்கையின் மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீண்ட நாட்களாக என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்று உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன் நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை எனது தனிப்பட்ட விருப்பத்திற்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை பயன்படுத்தவும் மாட்டேன் நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால்..

அதற்கு ஆதரவு தரவும் சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன் என் ரசிகர்களிடையே இந்த காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்க்கவில்லை.. பார்க்கவும் மாட்டேன் கோஷ்டி, பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தாங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி மன்ற இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய என்ன ஓட்டத்திற்கு உகந்தது இல்லை.

சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கும் சுமையிலாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன் நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம் நல்ல உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. அஜித்  நற்பணி இயக்கத்தை கலைத்த நாள் இன்று..

ajith
ajith