பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் கோலாகலமாக அக்டோபர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மிகவும் விறுவிறுப்பாக கடந்த ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை விடவும் இந்த சீசனில் குறைவான விஜய் டிவி பிரபலங்கள் அறிமுகப்படுத்தி ஏராளமானோர் முகம் தெரியாதவர்களை அறிமுகப்படுத்தி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.
அதோடு கூத்து, கானா மற்றும் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை என மிகவும் வித்தியாசமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தனது வாழ்வில் நடந்த ஏராளமான போராட்டங்களை கூறி தனது விடாமுயற்சியினால் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என அழுது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்கவைத்த நமிதா மாரிமுத்து உடல் நலக்குறைவால் எதிர்பாராதவிதமாக நேற்று வெளியேறினார்.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய கமலஹாசன் அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் ப்ரோமோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் போட்டியில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதே தெரியாமல் மிகவும் வெள்ளந்தியாக இருந்து வரும் தாமரை பற்றிய ப்ரோமோ தான் வெளியாகி உள்ளது.
கமலஹாசனிடம் கண்ணீர் மல்க தாமரை அழுகிறார் பிறகு கமலஹாசன் யாருக்கு லைக் போடுவீர்கள் காரணம் மற்றும் யாரை டிஸ்லைக் கொடுப்பீர்கள் அதற்கான காரணம் கூறுமாறு கேட்கிறார். அதற்கு தாமரை நான் குழந்தையில் இருக்கும் பொழுது சிரிக்கணும் விளையாடனும் என ஆசைப்பட்டேன் அது எல்லாம் இங்கு நடந்தது சார் என கண்ணீர் விட்டார்.
அதேபோல் நான் அழுதுகொண்டே இருந்தால் கூட என்னை அழைத்து பேசி சிரிக்க வைத்துவிடுவார் அண்ணாச்சி அதற்காக நான் லைக் தரேன் என்று கூறிவிட்டு டிஸ்லைக் யாருக்கு தர வேண்டும் என்று சாமி சத்தியமா எனக்கு தெரியல எனக்கூற மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கும் ப்ரோமோ தான் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
#BiggBossTamil இல் இன்று.. #Day7 #Promo 2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/SogYJFR11R
— Vijay Television (@vijaytelevision) October 10, 2021