இன்னைக்கு யாரு வேணாலும் கார் வாங்கி தரலாம்.. முதல்ல விதை போட்டது தல தான்.! வைரலாகும் வீடியோ

Ajith
Ajith

Ajith : நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி 4000 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது படம் குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.

வருகின்ற 7 ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்திலும் வெளியாக இருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியால் சந்தோஷமடைந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினிக்கு 1.5 கோடி மதிப்பு இல்லாத பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரையும், படத்தை இயக்கி நெல்சன் திலீப் குமாருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள porsche காரையும்  கொடுத்தார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகியது.

இதற்கு முன்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டதால் நல்ல வசூலை பார்த்தது இதனால் சந்தோஷம் அடைந்த உதயநிதி மாரி செல்வராஜுக்கு 50 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் அதற்கு முன்பு கமலின் விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை கொடுத்தார்.

வெந்து தணிந்தது காடு படத்திற்காக  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு 90 லட்சம் மதிப்பிலான டொயோட்டா காரை பரிசாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஒரு படம் ஹிட் அடித்து விட்டால்  தயாரிப்பாளர் நடிகர்களுக்கும், இயக்குனருக்கும் மாறி மாறி காரை கொடுத்து அழகு பார்க்கின்றனர் ஆனால் இதற்கு எல்லாம் முதலில் விதை போட்டது அஜித் தான்.

1995 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது அப்பொழுது அஜித் எஸ்.ஜே சூர்யாவுக்கு சான்ட்ரோ கார் ஒன்றை கிப்டாக கொடுத்தார் வாலி சூட்டிங் தொடங்கும் முன்பு எஸ்.ஜே. சூர்யாவுக்கு பைக் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.