தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக விளங்கியவர் தல அஜித் இப்போது சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல அஜித் அவர்கள் ஆரம்பத்தில் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் தாண்டி இந்த இடத்தை அவர் பிடித்துள்ளார் இவர் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் சினிமாவிற்காக கடினமாக உழைத்து வருகிறார்.
இவர் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் சூட்டிங் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போயுள்ளது. இருப்பினும் இப்படத்தின் போஸ்டர் காக தல ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
அஜித் நடித்து வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் அவள்வருவாளா இத்திரைப்படத்தை ராஜ்கபூர் இயக்கியிருந்தார். ராஜ் கபூர் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் இதில் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் அவர் கூறியது.
அவரு தங்கமான மனுஷன், சுத்தமான தங்கம் அவர் இன்று இந்த உயரத்தில் இருக்க அவரின் கடின உழைப்பு மட்டுமே காரணம் என தெரிவித்தார் மேலும் அந்த அளவிற்கு சினிமாவில் கடினமாக உழைத்தார், அதுதான் அவரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் உட்கார வைத்துள்ளது என்று கூறி தல ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்துள்ளார்.இச்செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது.