Ajjith memes: உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மேலும் ஒரு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது, இந்த நிலையில் மேலும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறி வருகிறது, இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளை திறக்க மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கும் நிலையில், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் மதுபான கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மதுபான கடை முன்பு ஆயிரக்கணக்கான குடிமகன்கள் ஒன்றுகூடி நீண்ட வரிசையில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது, அது மட்டுமில்லாமல் ஒரு சில இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைத் கலைத்தார்கள்.
கொரோனா என்ற வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டிய இந்த நேரத்தில் இப்படி அக்கறை இல்லாமல் நடந்து கொண்டது அனைவருக்கும் வேதனையை கொடுத்துள்ளது, மது பிரியர்கள் டாஸ்மார்க் கடையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் அஜித்துடன் ஒப்பீடு மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு மீம்ஸ் கிரியேட் செய்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்கள். இதனை பார்த்த சச்சின் பட இயக்குனர் இது மிகவும் மலிவான பதிவு என தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Very cheap posting…
— johnMahendran (@johnroshan) May 4, 2020