Ajith : நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை, விசுவாசம் படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலும் இடம் பெறும் என கூறப்படுகிறது இந்த நிலையில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம்..
வெளியாகி நான்கு வருடங்கள் ஆனதை அடுத்து படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அஜித் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்தது தான் மிக கேவலமான ஒரு முடிவு என ட்விட்டர் பக்கத்தில் போட்டு உள்ளார் மேலும் நேர்கொண்ட பார்வை முழுக்க முழுக்க A சென்டர்களுக்கான காண படம்..
விசுவாசம் எப்படி குடும்ப ஆடியன்ஸை தானாக இழுத்ததோ அதைவிட பல மடங்கு பின்னடைவை நேர்கொண்ட பார்வை படம் பெற்று தந்தது மேலும் இந்தப் படத்தில் செண்டிமெண்ட் சீன்கள் திணிக்கப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது அது அவருக்கு சுத்தமாக செட் ஆகவில்லை எனவும் கூறியிருந்தார்.
இதற்கு கமல் பட நடிகை காயத்ரி அவர் சொன்னது என்னவென்றால்.. ஒரு படத்தின் வெற்றி பாக்ஸ் ஆபிஸை மட்டும் சார்ந்தது இல்லை சமூகத்தில் அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும் இந்த படம் எப்படிப்பட்ட விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
மேலும் அது தொடரவும் செய்யும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் நாங்க அவருக்கு பதிலடி கொடுக்க இருந்தோம் நீங்களும் முன்கூட்டியே கொடுத்து சூப்பர் என கூறி கமெண்ட் எடுத்து வருகின்றனர்.