சின்னத்திரையில் மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கதையில் முக்கிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. கோபி இவ்வளவு நாள் தனது குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவிடம் பேசி வந்த உண்மை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.
இதுவரை தாத்தா எழிலுக்கு மட்டும் தெரிந்து வந்த உண்மை நேற்று ராதிகாவின் முதல் கணவர் ராஜேஷ் கோபி வீட்டிற்கு வந்து குடும்பத்தில் அனைவரும் இருக்கும் பொழுது கோபியை பற்றி கண்ணா பின்னானு திட்டி உள்ளார். பலரும் எதற்காக திட்டுகிறார் என தெரியாமல் ஷாக் ஆகின்ற நிலையில் எழில் ராஜேஷை..
தனியாக கூட்டிச் சென்று பேசியதால் ஈஸ்வரிக்கு சந்தேகம் வந்து எழிலை ஏன் நீ தனியா சென்று அவரிடம் பேசின என்ன பிரச்சனை என்ன நடக்குது என துருவி துருவி கேள்வி கேட்க தாத்தா ஈஸ்வரி இடம் உன் மகன் நீ நினைக்கிற மாதிரி இல்ல அவ நல்லவனே கிடையாது வேற ஒரு பெண்ணுடன் அவனுக்கு தொடர்பு இருக்கு என கோபியை பற்றி உண்மைகளை எல்லாத்தையும் கூற..
ஈஸ்வரி ஷாக் ஆகி கோபிக்கு போன் செய்து உடனே நீ வீட்டுக்கு வா உன்னை பற்றி அப்பா எழில் ஏதேதோ சொன்னார்கள் என சொல்லியதும் கோபி வேகமாக கார் ஓட்டி கொண்டு வருகிறார் அதனால் அந்த கார் ஆக்சிடென்ட் ஆகி கோபியை மருத்துவமனையில் சிலர் சேர்த்துள்ளனர்.
பின்பு மருத்துவமனையில் இருந்து பாக்யாவிற்கு போன் செய்து உங்கள் கணவர் ஹாஸ்பிடலில் இருக்காங்க என கூறினர் மேலும் ராதிகாவிற்கும் போன் செய்து உங்கள் கணவர் ஹாஸ்பிடலில் இருக்கிறார் என இருவருக்குமே கூறியதால் ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் அதிர்ச்சியில் உடனே மருத்துவமனைக்கு வருகிறார்கள் இது போன்ற ப்ரோமோ தற்போது பாக்யலக்ஷ்மி சீரியலிருந்து வெளியாகி உள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ.