ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டு தமிழக அரசு ஒரு சில விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது அந்த வகையில் மளிகை கடை மற்றும் மருத்துவமனைகள் போன்றவை பல மக்களின் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலும் ஒரு சில கடைகள் மற்றும் மருத்துவமனைகள் இதில் லாபம் பார்த்து விடலாம் என எண்ணி கணக்கு போட்டு களத்தில் குதித்துள்ளனர் அந்த வகையில் மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் பிரபல மகப்பேறு மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் பரிசோதனைக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த மருத்துவமனை நிர்வாகம் டாக்டரின் ஆலோசனை பெறுவதற்கு 300 ரூபாயும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கையில் சானிடைசர் தெளித்தற்காக்க கட்டணமாக 100 ரூபாயும் வசூல் செய்தது அந்த நிர்வாகம்.
இதனையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது வசூலித்தது என்னவோ உண்மைதான் ஆனால் சனிடைசருக்காக எதுவும் வசூலிக்கவில்லை என அந்த நிறுவனம் பதிலளித்துள்ளது. இருப்பினும் இச்செய்தி மக்கள் மத்தியில் மாபெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.