நயன்தாராவுடன் ஜோடி போட்டு நடிக்க.. 8 நாள் சாப்பிடாமல் கடந்த பிரபல ஹீரோ.! வெளிச்சத்திற்கு வந்த உண்மை.

nayanthara
nayanthara

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்பு தென்மேற்கு பருவகாற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும், சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தன்னை தக்கவைத்துக் கொண்டவர்.

ஒரு கட்டத்திற்கு பின்பு ஹீரோவை தாண்டி வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன்னை தத்துரூபமாக அந்த கதாபாத்திரத்தில் இறக்கி நடித்து மிரட்டி வருகிறார். அண்மையில் கூட கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் விஜய் சேதுபதி தமிழில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி வந்த கட்டத்தில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதிக்கு நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையை கூறியுள்ளார்.

முதலில் விஜய் சேதுபதி இந்த படத்தின் கதைக்கு என் உடல் பாவனை செட்டாகாது என்பதால் நடிக்க மறுத்து விட்டார். பின்பு விக்னேஷ் சிவன் பல நடிகர்களுக்கு இந்த கதையை கூறி வந்த நிலையில் யாரும் இந்த படத்தில் நடிக்க முன்வராத பட்சத்தில் நட்பின் காரணமாக விஜய்சேதுபதி மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

அதனால் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்காக எட்டுநாள் சாப்பிடவே இல்லையாம் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அப்போது உடல் எடையை குறைத்து தான் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்தார். படமும் வெளிவந்து நல்ல ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது