இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் விக்ரம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாகவே வசூலிலும் அடித்து நொறுக்கியது.
இதுவரை 420 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது இன்னுமே இந்த திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த படத்தின் வசூல் இன்னும் நிற்கவில்லை. இந்த படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும்..
மறுபக்கம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பரான நடிகர்கள் நடித்ததால் அந்த படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது. அந்த வகையில் விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாஸில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், போன்ற பலர் நடித்திருந்தனர் இந்த படத்தில் குறிப்பாக கமலை தொடர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பு மிரட்டும்..
வகையில் இருந்தது கடைசியாக இந்த படத்தில் இரண்டு, மூன்று நிமிடங்களில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டிருந்தார் நடிகர் சூர்யா. இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது ரோலக்ஸ் ரோலில் நடிக்க முதலில் வேறு ஒருவரை தான் நடிக்க வைக்க பார்த்தனர்.
ஆனால் ஷூட்டிங் தொடங்கும் ஒரு வாரம் முன்பு தான் தனக்கு தெரியும் சூர்யா இந்த படத்தில் நடிக்கிறார் என்று தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுபோல வருவது நன்றாக இருக்கிறது ஸ்டார் என்ற இமேஜை தூக்கி ஓரம் வைத்துவிட்டு ஒரு படமாக ஆடியன்சைக்காக present செய்வது பெரிய சந்தோஷம் என சூர்யாவை புகழ்ந்து பேசினார் நடிகர் விஜய் சேதுபதி.