லோகேஷ் கனகராஜை ஒதுக்க… சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்ட தளபதி விஜய்.? குழப்பத்தில் ரசிகர்கள்.!

vijay
vijay

தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. விஜயின் 66 வது படமான வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு படத்தை தயாரித்து வருகிறார்.

வாரிசு படம் குடும்பத்தை மையமாக வைத்து உருவாக்குவதாக ஒரு பக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன வாரிசு படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஸ்பு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரையரங்கில் வெளியாகும் என பட குழு திட்டவட்டமாக இருக்கிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக லோகேஷ் உடன் இணைவார் என கூறப்பட்டது. அடுத்ததாக லோகேஷ் மற்றும் விஜய் இணையும் தகவல் வெளியானதே தவிர இன்றுவரை அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ஏற்கனவே விஜயை சந்தித்து.

ஒரு அற்புதமான கதையை கூறினாராம் அது அவருக்கு ரொம்ப பிடித்த போகவே கதையை விரிவு படுத்துங்கள் என கூறினாராம். சிபி சக்கரவர்த்தி தற்பொழுது அதற்கான வேலைகளை பார்த்து வருவதால் விஜயின் அடுத்த படத்தை சிபிச் சக்கரவர்த்தி இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபக்கம் தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் இயக்குவார் என சொல்லப்பட்டது ஆனால் தற்பொழுது அதிகாரப்பூர்வ  அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருப்பதால் விஜயின் அடுத்த படத்தை இயக்க இரண்டு பேரில் யாரேனும் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கப்போகிறது என சொல்லப்படுகிறது அந்த லக்கியான இயக்குனர் யார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.