வலிமை படத்தின் ஒரு நாள் வசூலை பிடிக்கவே.. ஒரு வாரம் எடுத்துக்கொண்ட சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” – வெளிவரும் தகவல்.?

ET-and-valimai-
ET-and-valimai-

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தையாவது சிறப்பான முறையில் கொடுத்து ரசிகர்களை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் நடிகர் அஜித்தும் தொடர்ந்து வருடத்திற்கு ஓரு படத்தை கொடுத்து வந்தார்.

ஆனால் இவர் கடைசியாக நடித்த ஒளிமதி திரைப்படம் மட்டும் வெளிவருவதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு வழியாக கடந்த மாதம் 24ம் தேதி கோலாகலமாக உலக அளவில் வெளியானது. படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இருந்ததால் படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் இந்த திரைப்படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து கண்டுகளித்து வருகின்றனர்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் மட்டும் எந்த குறையும் வைக்காமல் அஜித்தின் வலிமை திரைப்படம் அடித்து நொறுக்கி வருகிறது. இதுவரை வலிமை படம் சுமார் 224 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது அஜித்தின் வலிமை திரைப்படம் முதன் நாளில் மட்டும் சுமார் 34 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை கொண்டு வருகிறது.படம் விமர்ச்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, ப்ரியங்கா அருள் மோகன் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து அசத்தியுள்ளனர்.

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் சுமார் 35 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன அஜித்தின் முதல் நாள் வசூல் 34 கோடி ஆனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஒரு வாரம் கழித்து தான் 35 கோடி அள்ளி உள்ளதாக தெரிவிக்கின்றன.