டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் நேரத்தை மாற்றிய தமிழக அரசு.!

tasmac

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது மக்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஒரு சிலர் மறைந்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை தற்போது அறிவித்துள்ளது ஆம் அதில் ஆறாம் தேதியிலிருந்து புதிய ஊரடங்கை தமிழ்நாடு அரசு புதிப்பித்துள்ளது அதாவது யாராயிருந்தாலும் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் கடைக்கு செல்ல வேண்டும் தேவை இல்லாத நேரத்தில் வெளியே வரக்கூடாது 12 மணி முதல் 4 மணிவரை ஊரடங்கு போட படுகிறதாம்.

இதை மீறி வெளியே வருபவர்களுக்கு தமிழக அரசு கடுமையான தண்டனை விதிக்குமாம் மேலும் ஊரடங்கு என்றால் நமது மது பிரியர்களுக்கு உடனே லாக் டவுன் போட்டு விடுவார்களா என அச்சத்தில் இருப்பார்கள்.

நமது மது பிரியர்களுக்கு ஏற்கனவே பல மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது மிகவும் வருத்தமாகிவிட்டது அதுமட்டுமல்லாமல் பலரும் மது அருந்தாமல் கஷ்டப்பட்டு வந்தார்கள் இந்நிலையில் அவர்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஆம் அவர்கள் மது அருந்துவதற்கான நேரத்தை தற்போது தமிழக அரசு முடிவெடுத்து வெளியிட்டுள்ளது அதில் காலையில் 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்படும் எனவும் 12 மணிக்கு மேல் கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

tasmac2
tasmac2

மேலும் இந்த தகவலை அறிந்த நமது மது பிரியர்கள் உடனே அவசர அவசரமாக டாஸ்மாக் கடைக்கு தான் செல்வார்கள் ஏனென்றால் 12 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை திறக்காது என்பதால்தான்.அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த நமது மது பிரியர்கள் ஒரே உற்சாகத்தில் குதித்து வருவது மட்டுமல்லாமல் இந்த தகவலை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.