“வலிமை” படத்திற்கு படக்குழு முதலில் தேர்ந்தெடுத்த டைட்டில் என்ன தெரியுமா.?

valimai
valimai

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார் இவர் அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளன அந்த வகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தின் வலிமை திரைப்படமும் கடந்த பிப்ரவரி 24 தேதி கோலாகலமாக வெளியாகியது.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போல வலிமை திரைப்படத்திலும் ஆக்ஷன் சென்டிமென்ட் த்ரில்லர் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல கொண்டாடினர். தற்பொழுது ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் இந்த படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர் மறுபக்கம் வசூலிலும் வலிமை திரைப்படம் அடித்து நொறுக்கி இருக்கிறது.

இதுவரை வலிமை திரைப்படம்  224 கோடிக்கு மேல் வசூல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மூலம் பல்வேறு டாப் நடிகர்களின் வசூலை முறை அடித்து உள்ளது. மூன்று வாரங்களை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் இத்திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

வலிமை படத்தில் அஜித்தை தாண்டி மற்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனைத்திலும் சிறப்பாக நடிகர்-நடிகைகள் அடித்து அசத்தியுள்ளார். இந்த காரணத்தினால் இந்த திரைப்படம் தமிழில் மற்ற ஏரியாக்களிலும் நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் குறித்தும் தகவல்கள் வெளிவருகின்றன அதன்படி முதலில் சாத்தானின் குழந்தைகள் என முதலில் பெயர் வைக்கப்பட்டது. இதை அறிந்த பிறகு அஜித் உடனடியாக v சம்பந்தப்பட்ட டைட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வழியாக யோசித்து வலிமையான பெயர் வைத்ததாம். நல்லவேளை அந்த பெயரை வைக்காமல் போனது நல்ல என இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.