சிம்பு வெளியிட்ட படத்தின் டைட்டில்.! டைட்டிலே சும்மா கெத்தா இருக்கே.!

simbu
simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுயிருப்பவர்கள் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு. அவர்கள் இருவரும் தற்போது வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் சிம்புவும் விஜய் சேதுபதியும் இணைந்து படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு செக்கசிவந்தவானம் படத்தில் நடித்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.இந்தநிலையில் பிந்துமாதவி நடித்துள்ள படத்தின் தலைப்பை விஜய்சேதுபதி மற்றும் சிம்பு இருவரும் சேர்ந்து படத்தின் தலைப்பை வெளியிடுவதாக அறிவித்தது. இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

இவர் இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் மற்றும் ஹரிஸ் கல்யாண் நடித்த இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pindu
pindu

இந்த நிலையில் பிந்துமாதவி நடித்த  படத்தின் டைட்டிலை சிம்பு அவருடைய வீட்டில் நடிகை பிந்துமாதவி மற்றும் இயக்குனர்களை அழைத்து அவர்களது முன்னிலையில் படத்தின் டைட்டிலை வெளியிட்டார். இந்த படத்திற்கு ‘யாருக்கும் அஞ்சேல்’ என்று பெயரிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.