சீன பொழுதுபோக்கு செயலின் மூலம் பலர் பிரபலம் அடைந்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹலோஆப், டிக் டாக் போன்றவற்றில் தங்களின் திறமையை சிலர் வெளிப்படுத்திய வெள்ளித்திரையில் நடிகராகவும் ,நடிகையாக மற்றும் காமெடியாகவும் மாறி வருகின்றனர்.இவர்களை போல பலரும் தனது திறமையை வெளிக்காட்டி டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் காமெடி என்ற பெயரில் சகட்டுமேனிக்கு பேசி பிரபலமடைந்தவர் தான் ஜி பி முத்து.
இவர் காமெடி என்ற பெயரில் கண்டமேனிக்கு பேசி வந்ததை பார்த்த நெட்டிசன்கள் பலர் இவரை கழுவி கழுவி ஊற்றி வந்தனர். நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் ஜி பி முத்து சேத்த பயலே நார பயலே என பதிலடி கொடுத்தாலும் அத்தகைய வார்த்தை பிடித்து போனதால் என்னுமோ அவர் மேலும் பிரபலமடையத் தொடங்கினார். இவர் அடிக்கடி செத்த பயலே நார பயலே என்று பேசி வந்த ஜி.பி .முத்துவை உசுப்பு ஏற்றி ஒரு படி மேலே சென்று கண்டமேனிக்கு திட்ட வைத்து பொழுதை போக்கி வந்தார் அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்.
இப்படி போய்க்கொண்டிருந்த ஜி பி முத்து தன் வாழ்க்கையையும் மேலும் உயர தொடங்கியது என்று கூற வேண்டும் இவர் ரவுடிபேபி சூர்யாவிடம செய்த காதல் லீலைகள் பல. ஜி பி முத்து வகை மாமா என அழைக்க அதற்கு இவர் அன்பே ஆருயிரே என உருகிய டிக் டாக் வீடியோக்கள் இன்று வரையிலும் பிரபலமாகி வருகின்றன மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டிக்டாக்கில் கூடி கும்மியடித்து வீடியோக்கள் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினந்தோறும் டிக்டாக்கில் பஞ்சாயத்துகளை சந்தித்து வந்த இவர்கள் திடீரென டிக் டாக் இல்லாமல் போனதால் சோகத்தில் சோறு தண்ணி சாப்பிடாமல் இருந்து வருகின்றனர்.இந்திய அரசாங்கம் சீன செயல்களான 59 ஆப்புகளை தடை செய்யப்பட்டுள்ளது அதில் ஒன்றுதான் பிரபலமடைந்த டிக் டாக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பொழுது டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் ஜி பி முத்து நெஞ்சு வலிப்பதாக கதறினார் எனவே இனி அந்த டிக் டாக் ஆப் பை யூஸ் பண்ண முடியாததால் என்பதால் தற்போது இவர்கள் சிங்காரி செயலைத்தான் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அவர் பல ஆப்புகளை பயன்படுத்தி வந்தாலும் டிக்டாக் போல் இல்லை என தெரிவித்தார். எனவே பிரதமர் மோடி அவர்களே தயவு செய்து டிக் டாக் ஆப் ஓபன் பண்ணி விடுங்க என கலங்கிய கண்களுடன் கெஞ்சி கூறி உள்ளார் மேலும் இதனால் தன்னுடைய மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளார் தற்பொழுது டிக் டாக் ஆப் இல்லாததால் இந்திய குடிமகன்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.