தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த டிக் டாக் பிரபலம்.! ஒருவேளை இரண்டாவது ஹீரோயின் இவர்தானா.!

vijay65

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்திற்கு தயாராகி உள்ளார்.

அந்தவகையில் தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இவரைத் தொடர்ந்து காமெடி நடிகரான யோகி பாபுவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களை தொடர்ந்து தற்போது டிக் டாக் பிரபலம் ஒருவர் தளபதி 65 திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் என்று கூறப்படுகிறது. டிக் டாக் மூலம் தற்போது வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பல நடிகர் நடிகைகள் அறிமுகமாகி உள்ளார்கள்.

ஆண்களை விடவும் பெண்கள் மிகவும் அழகாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் விரைவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது அழகின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தவர் நடிகை அபர்ணா. இவர் டப்ஸ்மாஷ் செய்வது, நடனமாடுவது என பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதன் மூலம் இவருக்கென்று அதிக ரசிகர்கள் உருவானதால் இயக்குனர் ஒருவர் தனது படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதன் மூலம் இவருக்கு ஒரு திரை படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிரபலமடைந்த இவர் தற்போது தளபதி 65 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அறிந்த பல நடிகைகள் வயித்தெரிச்சலில் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் பல நடிகைகள் எப்படியாவது தளபதி விஜய் உடன் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தவம் இருந்து வருகிறார்கள்.

aparna-das
aparna-das

ஆனால் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று வயித்தெரிச்சலில் இருந்து வருகிறார்கள்.