தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடைசியாக இவர் மிஸ் இந்தியா திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கு முன்பே குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர் முன்னணி நடிகையாகவும், தேசிய விருது பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இவர் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திரை உலகில் மிகவும் பிசியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆம் கடந்த வருடம் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஒரு பெண் அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது அந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.