விஜய்க்கு அடிச்சு தூக்கிய துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அட இவர் நடிச்சிருந்தா அவ்ளோதான் செம்ம ஹிட் தான்

thuppakki

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்று வெற்றி பெற்று வருகிறது, அதனால் விஜயை வைத்து படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜய் ஒரு காலத்தில் தொடர் தோல்வி திரைப் படங்களை கொடுத்துள்ளார், அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா வேலாயுதம், என பல படங்களை கொடுத்து தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது, பசியில் இருக்கும் சிங்கம் வேட்டை ஆடுவது போல் விஜய்க்கு கிடைத்தது முருகதாஸின துப்பாக்கி படம்.

விஜய் தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்ததால் பலரும் எந்த அடிப்படையில் கதையை தேர்வு செய்கிறார் விஜய் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது, ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைத்து விமர்சனங்களும் சுக்கு சுக்கா நொறுங்கியது. தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க துப்பாக்கி திரைப்படம் விஜய்க்கு உறுதுணையாக அமைந்தது.

அதேபோல் வசூல் மன்னனாக விஜய்யை திருப்பி போட்ட திரைப்படமும் துப்பாக்கி தான், இந்த திரைப்படம் 100 கோடி வசூலை அடைந்து மாபெரும் வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் ஹீரோவாக முதன்முதலில் நடிகை இருந்தது யார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது, துப்பாக்கி திரைப்படத்தில் முதன் முதலில் அக்ஷய்குமார் தான் ஹீரோவாக நடிக்க இருந்தார்.

துப்பாக்கி திரைப்படத்தின் முழு கதையை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இடம் முருகதாஸ் கூறியுள்ளார் அதேபோல் அக்ஷய் குமாரும் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்காமல் தள்ளிப்போய் கொண்டே போனது அதற்கு இடையில் முருகதாஸ் விஜயிடம் கதையைக் கூற விஜய்யும் உடனே நடிக்கலாம் என கூறிவிட்டாராம்.

உடனே முதலில் கமிட்டான அக்ஷய குமாரிடம் முருகதாஸ் விஜய்யை வைத்து இந்த திரைப்படத்தை எடுக்கட்டுமா என கேட்டுள்ளார் அக்ஷய்குமார் உங்களுடைய இஷ்டம்  என கூறிவிட்டார், ஆனால் அந்தக் காலகட்டத்தில் அக்ஷய்குமார் மிகவும் பிஸியாக இருந்துள்ளார் அதை காரணமாக கூறியுள்ளார் அக்ஷய்குமார், அக்ஷய் குமார் முருகதாசிடம் மீண்டும் ஒரு வருடத்திற்கு என்னுடைய கால்ஷீட் கிடைப்பது கடினம் ஆனால் நீங்கள் படத்தை முடித்து விடுங்கள் என கூறிவிட்டார் அக்ஷய்குமார்.

thuppaki
thuppaki

அதன் பிறகு துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் நடித்த படம் மெகா ஹிட்டானது விஜய் திரைப்பயணத்தில் வசூல் மன்னனாகவும் வலம்வந்தார், துப்பாக்கி படத்தை சில மாதங்கள் கழித்து ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை எடுக்கத் தொடங்கினார், அக்ஷய் குமார் முதலில் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்து இருந்தால் வழக்கம் போல் துப்பாக்கி படம் ரீமேக் படம் என்ற விமர்சனத்தை சந்தித்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.