துணிவை ஜெயித்ததா வாரிசு.! வெளியான முதல்நாள் வசூல் கருத்துகணிப்பு…

varisu
varisu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் நடிகர் கமல் மற்றும் ரஜினி. இவர்களுக்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் மற்றும் விஜய் தான் உள்ளார்கள் அந்த அளவிற்கு தற்போது விஜய் மற்றும் அஜித் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் பல திரைப்படங்களின் மூலம் இருவரும் மோதிக் கொண்டு உள்ளார்கள்.

அந்த வகையில் தற்போது அஜித் மற்றும் விஜய் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் மூலம் மறுபடியும் மோத இருக்கிறார்கள் இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து கருத்து கணிப்பு தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அந்த வகையில் தற்போது வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் கருத்துக்கணிப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மேலும் வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

ஒரு குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வாரிசு திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் தற்போது முதல் நாள் வசூல் குறைத்து ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி வருகிறது.

அதாவது ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் வாரிசு படம் முதல் நாள் 25 கோடி வரை வசூலிக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் முதல்நாளில் 30 கோடி வசூலிக்கும் என்று கூறபடுகிறது.