தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தற்போது துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மூலம் மறுபடியும் மோதி கொண்டு உள்ளார்கள். எட்டு வருடங்கள் கழித்து இவர்களுடைய படங்கள் ஒரே தினத்தில் திரையில் வருவதால் தல தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று வெளியான வாரிசு மற்றும் துணிவு படத்திற்காக இரண்டு தரப்பு ரசிகர்களும் தல தளபதி பேனரை கிழித்தி சண்டை போட்டுகொண்டனர். மேலும் இதில் யார் நம்பர் ஒன் என்ற போட்டி ரசிகர்கள் இடையே காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதற்கு ஏற்றது போல வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் அவர்கள் விஜய் தான் நம்பர் ஒன் அவருக்கு தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒரு சர்ச்சையான தகவலை வெளியிட்டு ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி விட்டார். இந்த நிலையில் விஜய் தான் நம்பர் ஒன் என்று ரசிகர்களும் கூறி வந்தார்கள்.
ஆனால் அஜித் ரசிகர்கள் படம் வந்து வெளியான பிறகு தெரியும் யார் நம்பர் ஒன் என்று அமைதியாக இருந்து விட்டார்கள் அந்த வகையில் நேற்று திரையரங்கில் வெளியான வாரிசு மற்றும் துனிவு படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 24.59 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் வாரிசு திரைப்படம் வெறும் 19.43 கோடி மட்டும் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது இதனை தனது titter பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) January 12, 2023