வசூல் கிங் யார்.? இதுவரை தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் துணிவா.. வாரிசா..

ajith-vijay
ajith-vijay

2022 எப்படி நடிகர்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்ததோ அதேபோல 2023 ஆம் ஆண்டும் ஆரம்பமே அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்புகின்றன குறிப்பாக அஜித்தின் துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்பவும் பிடித்துள்ளது.

காரணம் இந்த படத்தில் ஆக்சன் காமெடி சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் என அனைத்தும் இருந்தது இந்த படத்திற்கு பிளஸ் என கூறப்படுகிறது. மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தது அந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் பட்டையை கிளப்புகிறது.

இதுவரை 18 நாட்கள் முடிந்த நிலையில் இரண்டு திரைப்படங்களும் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த நிலவரம் வந்திருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் பெற்றது யார் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. 18 நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படம் மொத்தமாக தமிழகத்தில் 123 கோடி வசூல் செய்து இருக்கிறதாம் அதே சமயம் விஜயின் வாரிசு திரைப்படம் 122 கோடி வசூல் செய்துள்ளது இதன் மூலம் முதலிடத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் இருக்கிறது.

வாரிசும் விடாமல் துரத்திக் கொண்டே வருகிறது துணிவு படத்திற்கும் வாரிசு படத்திற்கும் ஒரு கோடி தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அடுத்தடுத்த நாட்களில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் நிகழலாம் கடைசியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதே இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை..