அஜித் விஜய்க்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் அதனால் அவர்களுடைய படங்கள் அசால்டாக 200 கோடி வசூல் செய்துவிடும் ஆனால் அஜித் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் மோதினால் வசூல் பாதிக்கும் என்பது உண்மைதான் இருந்தாலும் அந்த ரேஸில் யாரு கை ஓங்கி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு திரைப்படம் மோதின இரண்டு திரைப்படங்களுமே வெவ்வேறு கதைக்களமாக இருந்தது அஜித்தின் துணிவு திரைப்படத்தில் ஆக்சன் சமூக கருத்துக்கள் இடம் பெற்று இருந்தன அதனால் அந்த படம் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்புகிறது.
மறுபக்கம் விஜய்க்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகம் அதே போல வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக அமைந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர் இதனால் இந்த படத்திற்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இதுவரை தமிழ்நாட்டில் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் வசூல் தான் அதிகரித்து உள்ளது ஆனால் இரண்டிற்கும் கொஞ்சம் தான் டிஃப்ரண்ட் என சொல்லி வந்தனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளரும் விநியோகஸ்த்தருமான திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர் சொன்னது என்னவென்றால் இரண்டு திரைப்படங்களும் சமமான வசூலை அள்ளி உள்ளது சரியாக சொல்ல வேண்டும் என்றால் எனது தியேட்டரில் விஜயின் வாரிசு 63,79,933 ரூபாயும், அஜித்தின் துணிவு 6440839 ரூபாயும் வசூல் செய்திருக்கிறது என கூறி உள்ளார் இந்த தகவல் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.